விக்ரம் ஸ்ரேயா நடித்து வரும் கந்தசாமி படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு முத்தமிடுவது போன்ற காட்சியில் அடுத்தடுத்து இயக்குநர் டேக் வாங்கியதால் வெறுத்துப்போன நடிகை ஸ்ரேயா படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசி.கணேசன் இயக்கத்தில் விக்ரம் ஷ்ரியா நடிக்கும் படம் கந்தசாமி. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விக்ரமை ஸ்ரேயா முத்தமிடுவது போன்ற காட்சியை படமாக்கினார் சுசி.கணேசன். இது உதடோடு உதடு உரசும் முத்தம் என்று கூறப்படுகிறது.
இரண்டு முறை ஸ்ரேயா முத்தம் கொடுத்தும் சுசி.கணேசனுக்கு திருப்தி வரவில்லையாம். இதனால் மறுபடியும் ஒரு முறை முத்தமிடுமாறு ஸ்ரேயாவைக் கேட்டுள்ளார்.இதனால் மனம் வெறுத்துப் போன ஸ்ரேயா “இதுவரை கொடுத்ததே சரியாகத்தான் உள்ளது. அதையே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னதாகவும் ஆனால் இன்னொரு முறை முத்தம் கொடுத்தே ஆக வேண்டும் என்று சுசி.கணேசன் கட்டாயப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.இதனால் கோபத்துடன் ஸ்ரேயா படப்பிடிப்பிலிருந்து வெளியேறியதாக தகவல் பரவியது.
ஆனால் ஸ்ரேயாவோ “கந்தசாமி படத்தில் முத்தக்காட்சியே கிடையாது அப்படி இருக்கையில்நான் எப்படி வெளியேறுவேன்” என்றார். படக்குழுவினர் கூறுகையில் “மும்பையில் இருந்து ஸ்ரேயா எடுத்து வரவேண்டிய உடை வராதால்தான் படப்பிடிப்பு கேன்சலானது” என்றனர்.ஸ்ரேயாவின் ஹாலிவுட் படமான தி அதர் எண்ட் ஆப் தி லைன் படத்தில் ஹீரோ மெட்கேப்புடன் லிப் லாக் காட்சியில் நடிப்பவர் விக்ரமுடன் நடிக்கமாட்டாரா?
0 comments:
Post a Comment